டூவிட்டரை தெறிக்கவிடும் வலிமை படத்தின் வைரல் புகைப்படங்கள்!
ரஷ்யாவுக்கு ‘வலிமை’ படப்பிடிப்புக்காகச் சென்ற அஜித்தின் புதிய புகைப்படங்களும் படப்பிடிப்பை நிறைவு செய்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் ரஷ்யா சென்றிருந்தனர்.
ஓகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர்.

குறிப்பாக, அஜித்துக்காக பைக் சாகசக் காட்சிகளை ரஷ்ய நாட்டின் ஸ்டண்ட் மாஸ்டர்களும் பைக் சாகச வல்லுநர்களையும் வைத்து எடுத்துள்ளனர்.
’வலிமை’படத்தில் பணியாற்றிய ரஷ்ய படக்குழுவினர் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி எச்.வினோத், அஜித் ரஷ்ய குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களும் தற்போது வெளியாகி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

குறிப்பாக, படப்பிடிப்பில் பைக் சாகச காட்சிகளுக்காக ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள் அந்தரத்தில் பைக்குடன் தொங்கும் புகைப்படங்களும் பைக் சாகச இடங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன. அஜித் ரசிகர்கள் இதனை பகிர்ந்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

