10 மில்லியனுக்கு அதிக நிதி இழப்பு ; அரசாங்கத்தை அதிர வைத்த கிராம உத்தியோகத்தர்
அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர், அதிக வருமானம் ஈட்டும் நபர் ஒருவருக்கு விவசாயி என்ற தகுதியின் கீழ் போலியான வருமானச் சான்றிதழை வழங்கியுள்ளார்.

நிதி இழப்பு
இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய 10,625,000 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளித்தரப்பு நபர் ஒருவருக்கு நிதி ஆதாயங்களையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த ஊழல் நடவடிக்கையை அவர் முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (30) மதியம் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; அடுத்தடுத்து அவிழும் மர்ம முடிச்சுகள் ; கொழும்பில் சிக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.