பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக உணர்ச்சிவசப்பட்டு அழுத விக்ரமன்! இவர்தான் காரணம்
தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பல நெகிழ்சிகரமான சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
பைனலிற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார்.
பண மூட்டை பற்றிய அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் பணமூட்டையை கட் செய்து தான் 3 லட்ச ரூபாயுடன் வெளியேறுவதாக பிக்பாஸிடம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் திடீரென பிக்பாஸ் வீடே சோகமடைந்தது.
இதேவேளை, அமுதவாணன் வெளியேறுவதால் உணர்ச்சிவசப்பட்ட விக்ரமன் உடைந்து அழுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் - விக்ரமன் நல்ல நண்பர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தனர்.
இவ்வாறு இருக்கையில், அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து விக்ரமன் கண்ணீர் விட்டு அழுக அங்கிருந்த அசீம், ஷிவின் ஆகியோர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அமுதவாணனும், "நீங்க அழக்கூடாது விக்ரமன். நீங்க எல்லாம் கெத்தா இருக்கணும்" என்றபடி அவரை கட்டியணைத்துக் கொள்கிறார்.
அப்போது அங்கிருந்த ஷிவின் இன்னும் 2 நாட்களில் அவரை வெளியே சந்திக்கலாம் என விக்ரமனுக்கு ஆறுதல் சொல்கிறார்.
பைனல் டிக்கெட்டை ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த அமுதவாணன் இடையிலேயே பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்திருப்பதால் பிக்பாஸ் வீட்டினர் சோகமடைந்துள்ளனர்.
#Amudhavanan to #Vikraman :-
— Magizh Amudhan (@Amuthan1015) January 20, 2023
நீங்க ஜெயிச்சுட்டு வெளியவந்தா உங்க கருத்துகள் மூலம் நிறைய மாற்றங்கள் நிகழும்... #Vikraman :- ❤? ???????#vaathivikraman? #AramVellum #VikramanBB6TamilTitleWinner#Vikraman_Hero_Of_BBTamil6#Vikraman #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/f5nMUGq5al