விஜய்-யின் அரசியல்.... சினிமா விட த்ரில்லிங்காக இருக்கு; வைரலாகும் பதிவு
தமிழக அரசியல் களத்தில் விஜய் முதல்வர் ஆவாரா இல்லையா என்ற ஒரு கேள்வி பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் அவரது சினிமா கதைகளை விட திரில்லிங்காக மாறியுள்ளதாக போடப்பட்ட பதிவு வைரலாகியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பிஆர்.சுந்தர், தனது 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட ஒரு டிவீட் இதை முழுமையாக பிரதிபலிக்கிறது. இந்த டிவீட் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பி.ஆர்.சுந்தர் தனது டிவீட்டில்,
பங்குச் சந்தையின் நிஃப்டி இண்டெக்ஸை விஜய்யின் அரசியல் நிலைமையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். "நிஃப்டி: திங்கட்கிழமை புல்லிஷ், செவ்வாய் பியரிஷ், புதன் புல்லிஷ், வியாழன் பியரிஷ், வெள்ளி புல்லிஷ்... காலை 10 மணிக்கு பெரும்பான்மை,
11 மணிக்கு இல்லை, 12 மணிக்கு பெரும்பான்மை, 1 மணிக்கு இல்லை, 2 மணிக்கு பெரும்பான்மை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பங்குச் சந்தையும் அரசியலும் சினிமாவை விட அதிக சஸ்பென்ஸ் திரில்லர்" என்று பிஆர்.சுந்தர் முடித்துள்ளார்.
இந்த ஒப்பீடு, விஜய்யின் அரசியல் பயணத்தில் தினந்தோறும் ஏற்படும் மாற்றங்களால் எந்தளவுக்கு விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.