கலைஞருக்கு பி்ன்னால் நின்ற சிறுவனால் சரிந்த அரசியல் சாம்ராஜ்யம் ; வைரலாகும் விஜய்யின் புகைப்படம்
விஜய் சிறுவனாக இருந்துபோது கலைஞர் கருணாநிதி கலந்துகொண்ட ஒருவிழாவில் அவர் தனது தந்தை மற்றும் தாயுடன் விஜய் நிற்கு புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆர் துவங்கி பல நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆருக்கு பின் விஜய்க்கு மட்டுமே மக்களின் பேராதரவு கிடைத்திருக்கிறது.

முதல்வராகும் விஜய்
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
அதாவது, விஜய் முதல்வராகவிருக்கிறார். விஜயின் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது.
விஜய் முதல்வராவது உறுதியாக விட்டாலும் தவெக ஆட்சி அமைக்க கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே காங்கிரஸ், பாமக, விசிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பில் பேசி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவை விஜய் தோற்கடித்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது. திமுக 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்திருக்கிறார்.
இதுதான் திமுகவினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், விஜய் சிறுவனாக இருந்துபோது கலைஞர் கருணாநிதி கலந்துகொண்ட ஒருவிழாவில் அவர் தனது தந்தை மற்றும் தாயுடன் விஜய் நிற்கு புகைப்படத்தை பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா பகிர்ந்து ‘தனக்கு பின்னால் நிற்கும் இந்த சிறுவன் எதிர்காலத்தில் திமுகவை அழிப்பான் என கலைஞர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்’ என பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு ‘திமுகவை யாராலும் அழிக்கமுடியாது’ என திமுகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.