விஜய் கரூர் செல்ல திட்டம் ; அனுமதி கோரி பொலிஸாரிடம் மனு தாக்கல்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கரூர் செல்ல அனுமதி கோரி தமிழ்நாட்டு பொலிஸாரிடம் மனு கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சூழலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த.வெ.க கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், தெரிவித்துள்ளதாவது,
"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்க சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் மின்னஞ்சல் மூலம் அனுமதி கோரி உள்ளோம்.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பத்தினருடன் விஜய் காணொளி அழைப்பு மூலம் பேசியுள்ளார். ” என்று தெரிவித்திருந்தார்.
விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்கினால் அப்போது அவருக்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.