விஜய்யின் ஜனநாயகன் படம் கசிவு விவகாரம் ; சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன்' திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமான முறையில் இணையதளத்தில் கசியவிட்ட பல இணையதளங்களை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

அத்துடன், திரைப்படத்தைப் பதிவேற்றம் செய்திருந்த இணையப்பக்கங்களும் இதன்போது முடக்கப்பட்டன.
இணையதளங்கள் மட்டுமன்றி, அப்படத்தைப் பகிர்ந்த டெலிகிராம் பக்கங்கள் மற்றும் ஏனைய சமூக வலைதளப் பக்கங்களையும் முடக்குவதற்கு தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திரைப்படத் துறையினருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான இணையத் திருட்டுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.