நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவர்கொண்டா திருமண நிச்சயதார்த்தம் !
நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவர்கொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தகவல்கள் உலாவியது.
பெப்ரவரி மாதத்தில் திருமணம்
இந்த நிலையில், இருவருக்கும் ஐதராபாத்தில் உள்ள நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல் தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவர்கொண்டா தரப்பில் இருந்து எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை
. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவர்கொண்டா ஜோடி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.