சமூக வலைத்தள காணொளியால் சிக்கிய பொலிஸ் அதிகாரி
நபர் ஒருவர் மற்றொருவரைத் தடியால் தாக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் தாக்குதலை நடத்தியவர் பொலிஸ் அதிகாரி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம், தாக்குதலை நடத்தியவர் குளியாபிட்டிய காவல் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய அதிகாரி இடமாற்றம்
வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரால் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலை நடத்திய அதிகாரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குளியாபிட்டிய காவல் நிலையத்திலிருந்து மாவத்தகம காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த அதிகாரிக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.