வீடியோ கால் முத்தம் ; நவீன செயலியால் குக்ஷியில் காதலர்கள்!
புதிய கண்டுபிடிப்புக்களால் சீனா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது வீடியோ கால் மூலம் முத்தமிடும் கருவியை சீனாவை சேர்ந்த ஜியாங் ஜாங்லி கண்டுபிடித்துள்ளார்.
இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியுமாம். இதற்காக செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இளம்ஜோடிகள் ஆதரவு
அந்த ஆப் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் காதலி, அல்லது காதலனை தொடர்பு கொள்ள வேண்டும். அவரும் இணைப்பில் வந்ததும் இருவரும் நிஜத்தில் முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுத்து கொள்ளலாமாம்.
இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதே நேரம் இதற்கு இளம்ஜோடிகள் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த முத்த கருவியின் விலை ஆக 288 யுவான் அதாவது இந்திய ரூபாயில் ரூ.3,433 தான்.
சீனாவின் சான்சோவில் உள்ள சாங்சூ தொழிற்கல்வி நிறுவனம் மெகாட்ரானிக் டெக்னாலஜி இக்கருவிக்கு காப்புரிமை (Copyrights) வாங்கியுள்ளது. முத்த கருவியை ரிமோட் கிஸ் எனவும் சொல்கின்றனர்.
இதில் நகரும் வகையிலான சிலிக்கான் உதடுகள் உள்ளன. இந்த உதடுகள் வாயிலாக பிடித்த நபருக்கு முத்தத்தை அப்லோட் செய்துவிடலாமாம். அதுமடுமல்லாது அவர்களிடம் இருந்தும் முத்தத்தைப் பெறலாமாம்.
அதேவேளை நெட்டிசன்கள் இந்த கருவியை ஒருபுறம் புகழ்ந்தாலும், மற்றொரு புறம் கிண்டல் செய்தும் வருகின்றனர்.