யாழில் குடும்பஸ்தர் மீது கொலை வெறித் தாக்குதல்; பெண் உட்பட மூவர் கைது!
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெ-199 அம்பனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது போத்தல்கள் மற்றும் கம்பிகளால் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது.
நேற்று மாலை 2 மணி அளவில் பழைய பகையின் காரணமாக அயல் வீட்டாரினால் பணி நிமிர்தம் வெளியே செல்கையில் அயல் வீட்டாரினால் வீதியில் வைத்து மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட சம்பவமே இவ்வாறு பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 55 வயதுடைய முத்து ஜெகதீசன் என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டாரான இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.