கடகம் செல்லும் சுக்கிரன் ; இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஜூன் 08 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சுக்கிரனின் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் போது 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வருமானத்திலும் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பானதாக இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
இலஙடகையில் தம்பதியினரை கொன்று உடல்களைத் துண்டாடி கால்வாயில் புதைத்த சம்பவம் ; உதவி புரிந்தவருக்கு நேர்ந்த கதி
கடகம்: கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்த சொத்து கைக்கு வந்து சேரும்.
துலாம்: துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், இந்த பெயர்ச்சியின் போது 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.