வெனிசுவேலா இடிபாடுகளுக்கு இடையே பிறந்த குழந்தை; Miracle ...கொண்டாடும் இணையவாசிகள்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்கு இடையே மரியா ஃபெர்னாண்டா என்ற தாயார் , ஆண் குழந்தை ஒன்றை ஆரோக்கியமாகப் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துப் பகிர்ந்துள்ள தாய் மரியா, "உலகம் அதிர்ந்து கொண்டிருக்கும்போது ஒரு குழந்தையை இந்த உலகத்திற்கு வரவேற்பதே என் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சவால்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"வாழ்க்கை ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்தது" (Life is full of surprises and miracles) என்ற வாசகத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படத்தைப் பார்த்து, மிகக் கடினமான இச்சூழ்நிலையில் பிறந்த இக்குழந்தையை இணையவாசிகள் 'அதிசயக் குழந்தை' (Miracle) என அழைத்து நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.