அம்பிடியே சுமன ரதன தேரர் பிணையில் விடுவிப்பு
இன்று கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை பண்டாரதூவ பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று (23) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது
பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த இரு பிள்ளைகளை பாதுகாப்பற்ற முறையில் முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்ல முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் பொலிஸ் நிலையத்தில் முரண்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பிற்குரிய நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியது. அந்த நம்பிக்கையை அப்படியே பெற்றேன். நீதிமன்றத்திற்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
இலங்கை பொலிஸார் செய்த இந்த இழிவான செயலை இந்த நாட்டில் மற்றொரு அம்மா, தந்தை அல்லது பிள்ளைக்கு ஏற்படுத்த வேண்டாம்.
என் பிள்ளைகள் இல்லை, நாட்டின் எந்த பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி செய்ய வேண்டாம் என நான் கேட்டு கொள்கிறேன் என்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட சுமன ரதன தேரர் தெரிவித்தார்.