வேலுப்பிள்ளை மாதவமேஜரின் கோரிக்கை நிறைவேறும்! உறுதிமொழி அளித்த விக்கி
22 ஆண்டுகளுக்கு பின் இன்னுமொரு வேலுப்பிள்ளையின் மகன் தமிழ் தலைமைகளை ஒன்றிணைக்க முயற்சித்துள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் (C.V Vigneswaran) தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு சந்தியில், உள்ள இலங்கை வங்கி கட்டிடத்திற்கு அண்மையில் முன்னாள் போராளியும் மாவீரர்களின் சகோதரனும் நாட்டுப்பற்றாளரின் மகனுமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் நீராகாரம் எதுவுமின்றி சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் இன்றைய தினம் (12-01-2023) எழுத்து மூல உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்ட இடத்திற்கு சென்றிருந்த போதே சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அனைத்து போராளிகள் கட்சியும் இனைந்து செயற்படுகின்ற கைங்கரியத்தில் தாம் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு தினங்களில் புதிய கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.