நவராத்திரி முதல் நாளில் கையில் பணம் சேர்க்கப் போகும் ராசிக்காரர்கள்
இந்து மதத்தில் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நவராத்திரியில் துர்கா தேவியின் 9 வடிவங்கள் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்த நவராத்திரியில் பல சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிக்காரர்கள் துர்கா தேவி மற்றும் லட்சுமி தேவியின் சிறப்பு ஆசிகளை பெறவுள்ளனர். இப்போது நவராத்திரியில் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படும். மொத்தத்தில் வாழ்வின் பல வழிகளில் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் எல்லா துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் சிறப்பான செயல்திறனால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களின் புதிய திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரும். போட்டியாளர்களை வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமைகள் வலுவடையும். வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலர் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலைமை வலுவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளது.