யாழ் வேலனை மத்திய கல்லூரி நுழைவாயிலில் காணப்படும் வித்தியாசமான அறிவித்தல்!
யாழ்ப்பாணத்தில் உள்ள வேலனை மத்திய கல்லூரியினுள் நுழையும் போதும், பாடசாலை வாசலிலும் வித்தியசமான அறிவித்தல் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தால் ஓட்டப்பட்டுள்ளது.
ஆதாவது ”அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இதுவாகும்.
மாணவர்களிடையே போசாக்கு மட்டம் குறைந்துவிட்டது. அதன் விளைவாக கற்றல் செயற்பாடுகளும் மந்தமாக காணப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோரால் மாணவர்களுக்கு போசாக்கான உணவுகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை ஐநா அமைப்புக்கள் உட்பட சுகாதார துறையினர் என பலரும் தெரிவித்து வருகின்றார்கள்.
உலக உணவுத்திட்டம் பாடசாலையின் மதிய உணவுக்கு ரின் மீன்களை வழங்கி வருவதோடு, மதிய உணவில் முட்டை, நெத்தலி என்பவனவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.