வவுனியாவில் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்
வவுனியாவின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் அவர் அருகில் உள்ள வவுனியா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது வவுனியா நெடுஞ்சாலையில் இன்று மாலை நேரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவை நோக்கி சென்ற சொகுசு வாகனம், டிப்பர் வாகனம் மற்றும் லொறி ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் திடீரென வவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு அருகில் தான் இந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவபாலன் என்ற லொறி சாரதி ஒருவரே படுகாயமடைந்து வவவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது