பெண்ணைக் கடத்திச் சென்ற வாகனம் விபத்து...ஒருவர் பலி
கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்தி சென்ற டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றில் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இளம்பெண் ஒருவர் உள்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் கடத்தப்பட்டதக தெரிவிக்கப்படும் 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் குடும்பத்தார் கூறியதாவது, தங்கள் பெண்ணை சில நபர்கள் டிப்பர் வாகனத்தில் கடத்தி சென்றதாகவும் அவர்களை தாங்கள் விரட்டி சென்றதாகவும் அந்த சமயத்திலே குறித்த வாகனம் விபத்துக்குள்ளானதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.