2026 புத்தாண்டில் நிறைய சிரமங்களை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி 2026இல் கிரகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சனி பகவான் மீன ராசியில் இருப்பார். குரு பகவான் மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய ராசிகளில் பயணிப்பார். ராகு ஆண்டின் சில காலம் கும்ப ராசியிலும், பின் மகர ராசியிலும் பயணிப்பார்.

2026-ல் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இப்போது 2026 ஆம் ஆண்டின் கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் நிலைகளால் எந்த ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை எதிர் நோக்குவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் நிறைய சவால்களை சந்திப்பார்கள். இந்த ஆண்டில் ஏழரை சனி தொடர்ந்து நடப்பதால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். மனதில் கவலைகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டில் எதிரிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த புதிய ஆண்டில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்
2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக அஷ்டம சனி நடப்பதால், நிறைய மன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். எந்த வேலையை செய்தாலும் தடைகளை சந்திக்க நேரிடும். இந்த ஆண்டில் முதலீடுகளை செய்வதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு மந்தமாக இருக்கும்.

தனுசு
2026 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு படுமோசமாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்புக்களை அதிகம் சந்திக்க நேரிடும். மேலும் தேவையில்லாத நிறைய செலவுகளையும் சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வணிகர்களும் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். குறிப்பாக இந்த ஆண்டில் ஆரோக்கியம் மிகவும் மோசமாக இருக்கும். மருத்துவ செலவுகளை ஏராளமாக சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் பண பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
