வவுனியாவில் தொடர்ச்சியாக திருடப்படும் வாகன பற்றரிகள்! சிக்கிய இருவர்
வவுனியாவில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வாகன தரிப்பிடத்தில் வாகன பற்றரிகள் களவாடப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸ் குழுவினர் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, 4 வாகன பற்றரிகளுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்ட என சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னினைப்படுத்த நடவடிக்கையினை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.