சைவ உணவு பிரியர்களே புரோட்டீனாக இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
மனித உடலுக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத சத்தாகும். ஒவ்வொரு கிராம் புரோட்டீனும் சுமார் 4 கிலோ கலோரி ஆற்றலை உடலுக்கு கொடுக்கிறது.
எனவே தான் புரோட்டீன் மிகவும் அத்தியாவசியமான சத்தாகும். புரோட்டீன் உணவுகளானது தசைகளின் வலிமை, வயிறு நிறைந்த திருப்தி மற்றும் எடை இழப்பு போன்றவற்றை ஊக்குவிக்கின்றன.
புரோட்டீன் சத்தானது அசைவ உணவுகளில் அதிகம் காணப்படுவதால் அசைவ உணவை உண்பவர்களுக்கு இச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
ஆனால் வெஜிடேரியனாக இருப்பவர்களுக்கு புரோட்டீன் குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
அதுவும் தினமும் ஜிம் செல்பவர்கள் கட்டாயம் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் புரோட்டீனைத் தவிர நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன.
பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸ் வேளைகளில் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால் அதனால் புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கு கிடைத்து உடல் போதுமான ஆற்றலுடன் இருக்கும்.
ஆனால் பூசணி விதைகளை எப்போதும் பகல் வேளையில் தான் சாப்பிட வேண்டும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
ஜிம் செல்லும் வெஜிடேரியனாக இருந்தால் தினசரி உணவில் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை தவறாமல் சேர்த்து வாருங்கள்.
முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன்கள் அதிகமாக உள்ளன.
ஆனால் நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடும் போது, அவற்றை அளவாகவே சாப்பிட வேண்டும்.
அதிகமாக சாப்பிட்டால், அதுவே உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
டோஃபு
வெஜிடேரியனாக இருப்பவர்கள் சோயா பீன்ஸில் இருந்து புரோட்டீனை எளிதில் பெறலாம்.
சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான பன்னீரான டோஃபுவை உட்கொள்வது மிகவும் நல்லது.
100 கிராம் டோஃபுவில் 8 கிராம் புரோட்டீன்கள் உள்ளன.
எனவே ஜிம் செல்லும் சைவ உணவாளர்கள் எளிய முறையில் புரோட்டீனைப் பெற நினைத்தால், டோஃபுவை சாப்பிடலாம்.
பால் பொருட்கள்
பால், தயிர், சீஸ் போன்றவற்றில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. எனவே வெஜிடேரியன்கள் தினமும் பால் பொருட்களை தவறாமல் தங்களின் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
இதனால் உடலுக்கு வேண்டிய புரோட்டீன்கள் கிடைக்கும். அதுவும் பாலுடன் நட்ஸ், விதைகள் போன்றவற்றை சேர்த்து உட்கொள்ளும் போது இன்னும் அதிகமான அளவில் உடலுக்கு புரோட்டீன்கள் கிடைக்கும்.
பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்
பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, காராமணி போன்றவை ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் முக்கியமான சமையல் பொருட்களாகும்.
இவற்றைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிடலாம்.
வெஜிடேரியன்கள் பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ்களை தினசரி உணவில் சேர்த்து வந்தால், புரோட்டீன் குறைபாட்டை தவிர்க்கலாம்.
100 கிராம் பருப்பில் 19 கிராம்பு புரோட்டீன்கள் உள்ளன.