சைவ பிரியர்கள் புரத உணவுகளாக இதனை எடுத்து கொள்ளலாம்
புரத உணவுகளின் சிறந்த மூலமாக இறைச்சி, மீன் மற்றும் முட்டைகள் பரிந்துரைக்கப்படுகிறது.சைவ உணவு உண்பவர்கள் புரதத்தின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலமும் புரதசத்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சிறத்த புரத மூலங்களை கொண்ட காய்கறி உணவுகள்
காலிஃபிளவர்
காலிஃபிளவரை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. அத்துடன் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் அதில் மிக அதிகமாக உள்ளது.
இதனை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதத்தின் தேவை பூர்த்தியாகும்.
கீரை
கீரை பச்சை இலை காய்கறிகளில் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. இதில் புரதம் மட்டுமின்றி, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. எனவே, கீரையை தவறாமல் உட்கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதன் மூலம் புரதத்தைப் பெறலாம். அதற்காக வித்தியாசமாக சமைக்க வேண்டும்.
அதாவது நறுக்கிய உருளைக்கிழங்கை குறைந்த தீயில் வறுத்து சாப்பிட்டாலே போதும். இதிலிருந்து புரதம் மட்டுமின்றி நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும்.
ப்ரோக்கோலி
இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட விரும்பவில்லை என்றால் ப்ரோக்கோலி சாப்பிட ஆரம்பிக்கலாம். இது ஆரோக்கியமான காய்கறி.
இதில் புரதம் மட்டுமின்றி இரும்புச்சத்தும் கிடைக்கும். இதை வேகவைத்து அல்லது சாலட் செய்து சாப்பிடுவது கூடுதல் நன்மை.
காளான்கள்
காளான் புரதத்தின் வளமான ஆதாரமாக கருதப்படுகிறது. வாரத்திற்கு 3 முதல் 4 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் புரதம் உள்ளிட்ட பல சத்துக்களுக்கு குறை இருக்காது.