வவுனியா வெடுக்குநாறி மலையில் இரவு விசேட பூகை வழிபாடுகள்!
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகல் மீலவும் அதே இடத்தில் இன்று மதியம் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தின் சிலைகள் அண்மையில் மர்ம நபர்களால் உடைத்தெறியப்பட்டும் களவாடப்பட்டும் நிர்மூலமாக்கப்பட்டிருந்து குறிப்படத்தக்கது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் (28-04-2023) மதியம் குறித்த சிலைகள் மீளவும் அதே இடத்தில் மீள்பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சமயத் தலைவர்கள் மற்றும் பிரதேச மக்கள், அரசியற் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் மீள்பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறான நிலையில் இன்று இரவும் ஆதி லிங்கேஸ்வரர் மற்றும் அவரோடு இணைந்த பரிவார தெய்வங்களுக்கு விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.