வவுனியாவில் பெரும் துயரம்; குழந்தைக்கு எமனான ஊஞ்சல் தடி
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
நேற்று (27) திங்கட்கிழமை குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. குழந்தையின் தாய் சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.
ஓடும் மோட்டார் சைக்கிளில் வீதியில் பல மீற்றர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்; சம்பவத்தால் அதிர்ச்சி!
உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக (பிரேத பரிசோதனை) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.