வவுனியாவில் ஒரே நாளில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இரண்டு சம்பவங்கள்!
வவுனியாவில் ஒரே நாளில் இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வவுனியாவில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை (31-03-2022) தவசிகுளம் பகுதி இடம்பெற்றுள்ளது.
மனைவியும், பிள்ளையும் வைத்தியசாலை சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் குடும்ப தலைவர் இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
51 வயதுடைய மருதலிங்கம் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் இருந்தும் 35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.