கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கிய பூவரசங்குளம் பொலிஸ் நிலைய OIC
ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைது நடவடிக்கை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு
பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்றைய தினம் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் , OIC ஜந்து இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது கைது செய்துள்ளனர்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கைதான OIC இன்று (22) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.