மக்கள் காத்திருக்க வவுனியா விநியோகஸ்தரின் மோசமான செயல்; ஆப்பு வைத்த அதிகாரிகள்!
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள எரிவாயுக்கள் விநியோகஸ்தருக்கு வழங்குவதற்கென்று விநியோகிக்கப்பட்ட 20 எரிவாயுக்களையும் விநியோகஸ்தர் பதுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
மாவட்ட செயலக அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து காத்திருந்த மக்களுக்கு, பதுக்கப்படவிருந்த எரிவாயுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது . வவுனியா பட்டாணிச்சூரில் இன்று அதிகாலை முதல் எரிவாயுவை பெற்று கொள்வதற்காக காத்திருந்த மக்களுக்கு வழங்குவதற்கு என 20 எரிவாயுக்கள் எடுத்து வரப்பட்டுள்ளது .
எனினும் அங்கு நீண்டநேரமாக காத்திருந்த மக்களுக்கு அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து எரிவாயுவைப் பதுக்க விநியோகஸ்தர் முயன்றுள்ளார்.
இதையடுத்து அங்கு நீண்டநேரமாக காத்திருந்த மக்கள் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் மற்றும் அரச அதிகாரிகள் பதுக்கல் முறியடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு காத்திருந்த மக்களுக்கு 10 மணியளவில் காத்திருப்பு வரிசையின் இலக்கம் பெயர் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டு எரிவாயுக்கள் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.