வவுனியா குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! சந்தோகத்தில் உறவினர்கள்
வவுனியா - செட்டிக்குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (26-12-2021) மாலையே வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள கலாசியம்லாவ தம்பனைக்குளத்தில் இருந்து குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குளத்திலிருந்து மீட்கப்பட்டவர் தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஹரிந்து கோசல்யுஸ் வெத்தியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, இன்று மாலை குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வீட்டிலிருந்து நேற்றைய தினம் (25-12-2021) நண்பர்களுடன் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குறித்த இளைஞரை அவரது வீட்டார் தேடி வந்த நிலையிலேயே, குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தில் இருந்து சடலமாக மீட்கபட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், செட்டிக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.