வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்
வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (17-02-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவது, துவிச்சக்கரவண்டியுடன் கப் ரக வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை கப் ரக வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் கொண்டு சென்ற வேளை குருமன்காடு புகையிரத கடவை பகுதியில் மீண்டும் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.