அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இரட்டை முகம் அம்பலம்!
அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, (Vasudeva Nanayakkara) அரசால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டின்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனால் 51 மேலதிக வாக்குகளால் இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது. இதன்போது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நீதி கிடைக்கும்வரை அமைச்சு பதவியை வகிக்க போவதில்லை என அறிவித்திருந்த வாசு, வாகனம் மற்றும் அரசால் வழங்கப்பட்ட விதிவிடத்தையும் மீள கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.