வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தடுப்பு முகாமிற்கு!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே, ஹசந்த குணதிலக்க மற்றும் வென் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை நடத்துகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை
அதேசமயம் தேசத்துரோக சதிகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தெரியவந்தால், அவர்கள் மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ்மா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
அதேவேளை வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (22) அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.