அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உரை குறித்து வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் காட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்றில் உரையாற்றும் போது கரைவலை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததை கடலைப்பற்றித் தெரியாமல் பேச முனையாதீர்கள் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
யாழ் தொண்டைமானாற்றில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில் கடற்படையினர் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோலர் படகுகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கரைவலைத் தொழில் பாரம்பரியத் தொழில், அது ஒரு போதும் தடைசெய்யப்படவில்லை. நீரியல்வளத் திணைக்களத்திற்குச் சென்று விசாரித்துவிட்டு பேச முனையுங்கள் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரத்தில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இது முற்றிலும் பொய்யான கூற்று; இதை நாம் மறுக்கிறோம். அனலைதீவு, நெடுந்தீவு மகுதிகளில் நேற்றும் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கடற்படை இதனை சென்று பாருங்கள், பொய் கூற வேண்டாம் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்றில் உரையாற்றும் போது கரைவலை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடலைப்பற்றித் தெரியாமல் பேச முனையாதீர்கள். கரைவலைத் தொழில் பாரம்பரியத் தொழில், அது ஒரு போதும் தடைசெய்யப்படவில்லை.
நீரியல்வளத் திணைக்களத்திற்குச் சென்று விசாரித்துவிட்டு பேச முனையுங்கள் இவ்வாறுகேள்வி எழுப்பிய போது அமைச்சர் சந்திரசேகரம் கால அவகாசம் தாருங்கள் என்று கோருகிறார். கடலையும் கடற்றொழிலையும் தெரியாதவர்கள் பேச முனைய வேண்டாம், அமைச்சருக்கும் ஒன்றும் தெரியாது.
அவரை நீரியல்வளத்துறை அமைச்சராக்கி விட்டுள்ளனர். பொய்களைக் கூறி ஏமாற்றித் திரய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.