அரசாங்கத்தின் உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
அரசு விதித்த ஊரடங்கு உத்தரவை மீறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
குறிப்பாக கொழும்பின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பெருமளவான மக்கள் திரண்டிருந்தனர். கல்கிசை, இரத்மலானை, கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அவதானிக்க முடிந்தது. நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களுக்கு கூட தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டார்.
எவ்வாறாயினும், ஊரடங்கு உத்தரவை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டது.