திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ நகை காணிக்கை; மூக்கில் விரல் வைக்கும் இணையவாசிகள்!
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் வர்தமான் ஜெயின் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ (கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பு) தங்க நகைகளை காணிக்கையாக கொடுத்த சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் பேசு பொருளாகியுள்ளது.
இதையடுத்து யார் இந்த வர்தமான் ஜெயின் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. வர்தமான் ஜெயின் , சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியல் துறை படித்தவர்.

இவர் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் கணினி அறிவியல் முதுகலை பட்டம் பெற்றவர் .அமெரிக்காவில் உள்ள ACCESS HEALTHCARE (மெடிக்கள் பில்லிங் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனம்) மற்றும் ASIA CHENNAI ENGINEERING ஆகிய நிறுவனங்களை வர்தமான் ஜெயின் நிறுவியவர்.
2025ம் வருடத்தில் Access Healthcare நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்தவர் வர்தமான் ஜெயின் . காஞ்சி காமகோடி குழந்தைகள் நல அறக்கட்டளை மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாது வர்தமான் ஜெயின் முன்பு DELL நிறுவனத்தின் BPO பிரிவு மேலாண் இயக்குனராக பணியாற்றியவர்.