பீட்டர் பால் மரணம் பற்றி வருத்தமாக பேசிய வனிதா விஜயகுமார்!
நடிகை வனிதா விஜயகுமார் 2020யில் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவதாக திருமணம் செய்வதாக அறிவித்தார்.
கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் வீட்டிலேயே நடந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
அந்த திருமணத்திற்கு பிறகு நான்கே மாதத்தில் வனிதா பீட்டர் பாலை பிரிவதாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று பீட்டர் பால் திடீரென மரணமடைந்து இருக்கிறார் என்கிற செய்தி எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனிதா தற்போது பீட்டர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"என் அம்மா ஒரு விஷயத்தை சொல்வார். நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார். இந்த பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்." "முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், எல்லோருமே அவரவர் பாதையை தேர்வு செய்கிறார்கள்.
நீங்கள் சந்தித்த துயரங்கள் உடன் போராடி தற்போது அமைதியை அடைந்திருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன்."
"நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்க இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்" என வனிதா குறிப்பிட்டு இருக்கிறார்.