திடீரென முன்னோக்கி சென்று விபத்தை ஏற்படுத்திய வேன்!
வெல்லம்பிட்டிய மெகொடவில் உள்ள கொலன்னாவ கடையொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று திடீரென முன்னோக்கி சென்று அங்கிருந்த சிறுவன் மீது பயங்கரமாக மோதும் சிசிரிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுவன் மீது வேன் மோதியவுடன், உடனடியாக குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது சாரதியை தவிர பெண் ஒருவரும் சிறு குழந்தையொன்றும் வேனுக்குள் இருந்ததாகவும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
தடுப்பானை மிதிக்காமல் ஆக்சிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிறுவனுக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.