இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு
இன்று (28) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 39 சதம், விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 3 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 405 ரூபாய் 52 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 82 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 370 ரூபாய் 2 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 38 சதம், விற்பனைப் பெறுமதி 220 ரூபாய் 32 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபாய் 40 சதம், விற்பனைப் பெறுமதி 196 ரூபாய் 21 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 72 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 4 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 12 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.