வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி 500 ஆக இருக்கும்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வருட இறுதிக்குள் அமரிக்க டொலரின் பெறுமதி 500 ஆக இருக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க எச்சரித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான பாதையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே காட்டுகிறது எனவும் காமினி விஜேசிங்க சுட்டிக்காட்டினார்.
அதேசமயம் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு புதிய வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதை அரசாங்கம் இப்போது உணர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.