இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் பெறுமதி!
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 368 ரூபா 50 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 46 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.
அத்துடன் மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 377 ரூபா 63 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபா 19 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, பவுண்ட் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 443 ரூபா 26 சதமாகவும், பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 426 ரூபா 32 சதமாகவும் பதிவாகியுள்ளது.