வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க வலியுறுத்து
கடந்தகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்த்தமானியை நீக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என காணியை இழந்த மக்கள் கூட்டமைப்பின் செயற்பாட்டாளார் ஜான்சன் பிரிடாரோ வேண்டுகோள் விடுத்தார்.
யாழ். வலி வடக்கு மயிலிட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (04) 20 ஆவது வாரமாக இடம்பெற்ற நில மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் ,

வலி வடக்கு மக்களின் சுமார் 6,317 ஏக்கர் காணிகளை மகிந்த அரசாங்கம் கையகப்படுத்தி வர்த்தமானி வெளியிட்டது. மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த அனுரகுமார தலைமையிலான அரசாங்கமும் குறித்தவர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசுகளைப் போல் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.
மூன்று இடங்களில் போராட்டங்கள்
வலி வடக்கு பகுதியில் தமது சொந்த நிலங்களை விடுவக்குமாறு கோரி மூன்று இடங்களில் போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம் என ஆட்சிக்கு வந்து எதிர்வரும் வாரத்துடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது.
புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக வலி வடக்கு காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.