500 ஆண்டுகளுக்கு வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன் ; பணத்தை அள்ளிச் செல்லும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானும் மறுபுறம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதனும் நவம்பர் இறுதியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளன. அதில் சனி பகவான் நவம்பர் 28 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர் 30 ஆம் திகதி புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்

இப்போது சனியும், புதனும் அடுத்தடுத்து வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்
சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால், ரிஷப ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனத்தால், சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும். மேலும் ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதனின் ஆசியால் பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்
சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால் மகர ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கடகம்
சனியும், புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மனநிலை சீராக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புத்திசாலித்தனத்தால் பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள்.
