இலங்கைப் பிரதமரைச் சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி ; வைரலாகும் படங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கைப் பிரதமரைச் சந்தித்ததாகவும், இலங்கையில் பல இடங்களுக்குச் சென்றதாகவும் சமூக ஊடகங்களில் படங்கள் மற்றும் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் இந்திய மற்றும் இலங்கை சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த படங்கள் பொய்யானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

செயற்கை நுண்ணறிவு
அப்படிப்பட்ட சந்திப்போ அல்லது வருகையோ நடைபெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் அனைத்து செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கு முன்னதாக நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய 'ஏ' அணி கடந்த 05 திகதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.