நடிகர் வடிவேலுக்கு இத்தனை பேர பசங்களா: வடிவேல் மகனின் முதல் காணொளி போட்டி
தமிழ் சினிமா உலகில் காமெடியில் கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் படங்களில் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்.
இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது.
இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். இருந்தாலும் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெறாத இணையதளமே இல்லை. இந்நிலையில் வடிவேலு அவர்களின் மகன், மகள் குறித்து எந்த விஷயமே அதிகமாக பலருக்கும் தெரியாது.
மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடிவேலு தன் மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் ஊரில் வைத்து திருமணம் நடத்தினார்.
அந்த வகையில் தற்போது வடிவேலுவின் மகன் சுப்பிரமணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளார்கள்.
முதலில் ஒரு பெரிய பையன். இரண் டாவது ட்வின்ஸ் ஒரு பையன், ஒரு பொண்ணு ட்வின்ஸ் மூன்று பிள்ளைகள். இவர்களுக்கு எல்லாம் என் அப்பா வடிவேலு தான் பெயர் வைத்தார். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கு.
ஆனால், இப்ப இல்லை கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக படத்தில் நடிப்பேன். அப்ப நிறைய சொல்லுவார் சினிமாவில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்காக நிறைய கடின உழைப்பு வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.
அதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டிருக்கிறேன். நல்ல இயக்குனர், நல்ல கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும் எனக்கு நடிகர் அஜித் குமாரை ரொம்ப பிடிக்கும் எனவும் மேலும் நடிகர் விஜய், நடிகர் பிரசாத் பிடிக்கும் என காணொளியில் தெரிவித்திருந்தார்.
ஹாலிபுட் நடிகர் ஜீம் கோரி நடிப்பு பிடிக்கும் எனவும் அவரை போல் நடித்தும் காட்டியுள்ளார். குறித்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.