வெற்றிடமான முக்கிய பதவி; மஹிந்தவுக்கு பறந்த தொலைபேசி அழைப்புக்கள்!
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என பொலிஸ் உறுப்பினர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவுள்ள நிலையில் வெற்றிடமாகும் அவரது பதவி தொடர்பிலேயே தம்மிடம் அவர்கள் வினவியதாகவும் மஹிந்த குறிப்பிட்டார்.
மக்கள் சந்திப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பொலிஸ் மா அதிபர் தானே தெரிவு செய்யப்படுவதில்லை மாறாக ஜனாதிபதியாலும் அரசியலமைப்பு சபையாலும் தெரிவு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி ஒரு சிறந்த அதிகாரியை நியமிப்பார் என தான நம்புவதாகவும் மஹிந்த கூறியுள்ளார்.