உசிரே போகுது ...உசிரே போகுது ; அம்பாறை சபேசன் குரலை கேட்டு எழுந்தோடி வந்த பாடகர் கார்த்திக்!
தென்னிந்திய பிரபல் தொலைகாடிகளில் ஒன்றான ஜீ தமிழ் சரிகமப வில் தனது மேடையில் சிறப்பான பாடல்களால் பார்வையாளர்களின் மனங்களை வென்றவர் இலங்கையில் அம்பாறை சபேசன்.
இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த சபேசனின் உசிரே போகுது ...உசிரே போகுது பாடல் புரோமே வெளியாகி ரசிகர்களை குக்ஷிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் எபிசோட்களில் மூன்றாவது பைனலிஸ்ட் தெரிவு செய்யப்பட உள்ளார்.

சபேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாடகர் கார்த்திக்
அதற்காக இலங்கை அம்மாறை சபேசன் உள்ளிட்ட ஐவருக்கு இடையில் போட்டிகள் மும்முரமாக உள்ள நிலையில், சபேசனின் புரோமோக்காக இலங்கையர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தனர்.
அந்த வகையில் சபேசன் இராவணன் படத்திலிருந்து கார்த்திக் பாடிய உசுரே போகுதே.. உசுரே போகுதே.. என்ற பாடலை பாடினார். சபேசன் பாடிய பாடலைக்கேட்டு அரங்கமே எழுந்து நின்றது.
அந்த பாடலில் ஒரிஜினல் பாடகர் கார்த்திக் அவரது கதிரையில் இருந்து இறங்கிஓடி வந்து சபேசனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததுடன், அவருக்கு இன்னொரு ஸ்டார் கொடுத்ததுடன் இருவரும் சேர்ந்து உசுரே போகுது பாடலை அட்டகாசமாக பாடியுள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        