ஈரான் தாக்குதலில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாக்க நவீன சாதனம் வழங்கும் அமெரிக்கா!
ஈரான் ராக்கெட் தாக்குதலில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாக்க உதவியாக, அதிக உயரத்தில் ராக்கெட்டுகளை அழிக்கும்திறன் பெற்ற நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின் இதனை வழங்கினார். இதேபோன்று, இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிக்க உதவியாக அமெரிக்க ராணுவ அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேலைப் பாதுகாக்க நவீன சாதனம்
காசாவுக்கு எதிரான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது.
இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈரான் நாட்டின் தளபதி உள்ளிட்ட முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதலை நடத்தியது.
இநிலையில் ஈரான் தாக்குதலில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாக்க நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது.