கால்பந்து வெற்றி கோப்பையை உடைத்த அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்காவில் தேசிய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஓஹியோ மாகாண கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஓஹியோ அணி நேற்று வெற்றி கோப்பையுடன் வெள்ளைமாளிகைக்கு சென்றது. அங்கு துணை ஜனாதிபதி டேவிட் வென்சியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர், வென்சியுடன் சேர்ந்து வீரர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். புகைப்படம் எடுக்கும்போது துணை ஜனாதிபதி வென்சி, கால்பந்து வெற்றி கோப்பையை கையில் பிடித்து தூக்கினார்.
அப்போது கோப்பை இரண்டாக உடைந்தது. இதனால் வென்சி அதிர்ச்சியடைந்தார். பின்னர், கோப்பையின் மேல்பகுதியை மட்டும் கையில் எடுத்த வென்சி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
The CFP National Championship Trophy falls apart as VP JD Vance tries to hold it aloft at the White House. pic.twitter.com/XYmZRnCsK0
— Philip Melanchthon Wegmann (@PhilipWegmann) April 14, 2025
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.