திடீரென பாடசாலைக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு! பதைபதைக்கும் சம்பவம்
அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹூக் என்ற உயர்நிலை பாட்சாலை ஒன்று உள்ளது.

குறித்த பாடசாலைக்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சூட்டுள்ளார். இதில் 15 பேர் உயிரிழந்தாகவும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த நிலையில், தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பாடசாலை முன் குவிந்தனர்.

பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளை மீட்பதற்காக பெற்றோர்கள் பள்ளி வளாகம் அருகே குவிந்துள்ளனர்.

இது குறித்து டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அப்போட் கூறியது,
இந்த பாடசாலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

18 வயதுடைய இளைஞர் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 14 மாணவர்கள், 1 ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.