ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜோ பைடன் வெளியிட்ட கருத்து!
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என முன்னாள் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.
டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.
ஜனநாயக கட்சி சார்பில் முதலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரசாரத்தில் தடுமாறியதால் ஜோ பைடன் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்துதான் கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இருப்பினும், அவர் படுதோல்வி அடைந்தார். இதனை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், நான் போட்டியிட்டு இருந்தால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பேன் என்று கூறியுள்ளார்.